மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது – சிறிதரன் எம்.பி.
மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும், ஆற்றலும், தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும், தேசிய விடுதலைக்கான வளி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரே இந்த பாதையைக் கொண்டு செல்வார். என இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறவுள்ளது. அப்பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றர்.
இந்நிலையில் சனிக்கிழமை(06.01.2024) மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தி விட்டு மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
ஆங்கிலம், மொழி, சட்டம், என்பன ஒருவருடைய ஆற்றலும் திறமையுமாகும். இதனை யாரும் இகழ்ந்து பார்க்கதேவையில்லை. ஆனால் ஆங்கிலம், மொழி, சட்டம், போன்றவை என்றால் எமக்கு சேர்.பொன்.இராமநாதன், தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், போன்றோரின் காலத்தில் நாங்கள் விடுதலை பெற்றிருக்க வேண்டும். மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும், ஆற்றலும், தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும், தேசிய விடுதலைக்கான வளி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரை இந்த பாதையை கொண்டு செல்வார்.
எனவே தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்தித்த எமது கட்சியின் பொதுசபை உறுப்பினர்களிடையே நான் இக்சட்சியின் தலைவராக வரவேண்டும் என்ற என்ணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குரிய பெரும்பாலான ஆதரவையும், சம்மதத்தையும் எனக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். அவர்களின் பலத்தோடும், ஒற்றுமையோடும், நடைபெற இருக்கின்ற எமது உட்கட்சித் தேர்தலிலே நான் வெற்றிபெற்று கட்சியின் பொறுப்பை ஏற்று வழிநாத்திற் செல்வதற்கு நான் தாயாராக இருக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிந்தனர்.
0 Comments:
Post a Comment