19 Jan 2024

அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி ஆலயத் திறப்புவிழாவினை முன்னிட்டு நகர சங்கீர்த்தனம்.

SHARE

அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி  ஆலயத் திறப்புவிழாவினை முன்னிட்டு நகர சங்கீர்த்தனம்.

அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி  ஆலயத் திறப்புவிழாவினை முன்னிட்டு நகர சங்கீர்த்தனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(21.01.2024) பிற்பகல் 03.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்து களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் முடிவடைய உள்ளது.

இதன்போது ஆரையம்பதி ஸ்ரீபக்தப்பிரகலாதன் அறநெறிப் பாடசாலை, கற்சேனை மஹா விஷ்ணு ஆலயம், மாங்காடு  ஸ்ரீ சுயம்புலிங்க மஹா விஷ்ணு ஆலயம், தேற்றாததீவு ஸ்ரீ ஆண்டாள் பிருந்தாவன கிருஷ்ணர் ஆலயம்,தேற்றாத்தீவு அறநெறிப் பாடசாலை உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்ட சிறப்பிக்கவுள்ளதாக  இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளர்.




 

SHARE

Author: verified_user

0 Comments: