20 Jan 2024

கொட்டும் மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக நடைபெற்ற கோறளைப்பற்று பிரதேச செயலக தைப்பொங்கல் விழா.

SHARE

கொட்டும் மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக நடைபெற்ற கோறளைப்பற்று பிரதேச செயலக தைப்பொங்கல் விழா.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்றுவாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஆலயங்கள்கிராமமட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல்விழா வெள்ளிக்கிழமை(19.01.2024) உலகப்புகழ்பெற்ற உல்லாசபுரிகளில் ஒன்றான பாசிக்குடா கடற்கரை விளையாட்டு முற்றத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இதங்போது கல்குடா மகா விஷ்ணு ஆலயத்திலிருந்து கலாசார பண்பாட்டு பவனியுடன் ஆரம்பமாகி நிகழ்வு நடைபெறும் இடத்தை சென்றடைந்ததும்பிரதான பொங்கல் பானையில் புத்தரிசியிட்டு பிரதேச செயலக பிரிவில் உள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களால் விதம் விதமான சுவையுடைய பொங்கல் பானைகள் வைத்து  சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து கோறளைப்பற்று பிரதேச அறநெறிப் பாடசாலைகள்கலைமன்றங்களை சேர்ந்த மாணவர்களின் கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றனஇதனயடுத்து கல்குடா வலம்புரி மற்றும் வேளாங்கன்னி விளையாட்டு கழகங்களின் ஏற்பாட்டில் கலாசார பாரம்பரிய விளையாட்டுக்களான கரும்பு உடைத்தல்போர்த்தேங்காய் உடைத்தல்முதலான விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்களும்கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்களும்பரிசுப்பொதிகளும் வழங்கிவக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.அமலினி கார்த்தீபன்கணக்காளர் ஜே.ஜோர்ச் ஆனந்தராஜ்உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன்நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார்பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள்வெளிக்கள உத்தியோகத்தர்கள்கிராம உத்தியோகத்தர்கள் கல்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த இந்து ஆலயங்களின் நிர்வாகிகள்கிராம அபிவிருத்தி சங்கங்கள்மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள்மீனவர் சங்கங்கள்மரண ஆதார சங்கங்கள்பழைய மாணவர் சங்கங்கள்விளையாட்டு கழகத்தினர்ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள்வெளிநாட்டு  சுற்றுலா உல்லாச பயணிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






































SHARE

Author: verified_user

0 Comments: