பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு மென்றேசோ பயிற்சி நிலையத்த்தில் நடைபெற்றது. கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி முமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பவானி பொன்சேகா அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள மேற்படி சட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் இஸ்ஸடீன், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத்தலைவர் எனபலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் இதன்போது கலந்து கொண்டிருந்தவர்களும், இச்சட்டங்கள் தொடர்பில் கருத்துகளை முன்வைத்ததுடன், இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மக்கள் எதிர்கொள்ளவுள்ள சவால்கள், தொடர்பிலும், ஆராயப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment