1 Jan 2024

பெரியகல்லாறு ஆற்றுவாய் வெட்டப்பட்டுள்ளது.

SHARE

பெரியகல்லாறு ஆற்றுவாய் வெட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடற்சியாக பெய்துவந்த பலத்த மழை சனிக்கிழமை(30.12.2023) சற்று ஓய்ந்துள்ளது. எனினும் வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் கிராமங்களுக்குள்ளும், கிராமிய வீதிகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் தேங்கிக் கிடப்பதனால் மக்கள் பலத்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள ஆற்றுவாய் வெட்டி விடப்படும் பட்சத்தில் மிக விரைவாக வெள்ள நீர் வழிந்தோடுவதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளதாக அப்பகுதி மக்களும், மீனவர்களும், விவசாயிகளும் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவரிகளிடம் முன்வைத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிணங்க இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நீர்ப்பாசனப் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி .நாகரெத்தினம் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனைக்கமைவாக சனிக்கிழமை(30.12.2023) காலை பெரியகல்லாறில் அமைந்துள்ள முகத்துவாரம்(ஆற்றுவாய்) பெக்கோ இயந்திரத்தின் மூலம் அழப்பட்டு வெள்ளநீர் கடலுக்கு அனுப்பும் செய்ற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆற்றுவாய் வெட்டு இடத்திற்கு இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாக அவரது செயலாளர் பூ.பிரசாந்தன், நீர்ப்பாசனப் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி .நாகரெத்தினம், நவகிரிப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் சு.கிசோகாந், மற்றும் பொதுமக்கள், மீனவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமது கேகாரிக்கைக்கு இணங்க ஆற்றுவாய் வெட்டி தேங்கியுள்ள வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவற்கு நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் அப்பகுதி மக்கள் இதன்போது நன்றி தெரிவித்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: