19 Dec 2023

பேரூந்து சாரதியிக்கு கொடூர தாக்குதலைக் கண்டித்து சக சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பில்.

SHARE

பேரூந்து சாரதியிக்கு கொடூர தாக்குதலைக் கண்டித்து சக சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பில்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து அமைச்சினால் பின்தங்கிய பிரதேச மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வரும் சில தனியார் பஸ் சாரதிகளினால் மட்டக்களப்பில் இருந்து அம்பிளாந்துறை நோக்கிச் சென்று வரும் மட்டக்களப்பு போக்குவரத்து சாலையின் சாரதி எஸ்.சாந்தன் எனும் பேரூந்து சாரதி திங்கட்கிழமை கொடூரமாக தாக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை போலிசில் முறைப்பாடு செய்த பின் அங்கிருந்து மகிழடித்தீவு வைத்தியசாலை ஊடாக தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த மிருகத்தனமான தாக்குதலை கண்டித்து செவ்வாய்கிழமை(19.12.2023) மட்டக்களப்பு போக்குவரத்து சாலையின் சகல செயற்பாடுகளும் முடக்கப்பட்டு  இருந்ததனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர். இதனால் படுவான்கரைக்கு சென்று வரும் சகல அரசு ஊழியர்கள் மாணவர்கள் நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இடம்பெற்ற இச்சம்பவம் சம்பந்தமாக கொக்கட்டிச்சோலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட போலிசார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் முகமாக இப்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்கியவர்களை  கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்தப்படும் வரை பணிப் பகிஸ்கரிப்பில் தொடர்ந்தும் ஈடுபட உள்ளதாகவும் நிரந்தர தீர்வு கிடைக்காவிடில் புதன்கிழமை தொடக்கம் கிழக்கு மாகாணம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சாலை பிரதான முகாமையாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு சாலை முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை காட்சிப் படுத்தப்பட்டிருந்ததுடன், சாரதிக்கு நியாயமான கோரிக்கை வேண்டி அமைதியான முறையில் தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துசாலை தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி சக உத்தியோகஸ்த்தர்கள், பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்ற இந்நிலையில், மட்டக்களப்பு சாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டுவந்த அனைத்து பகுதிக்குமான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ள இன்நிலையில் பொதுமக்கள் பொதுப்போக்குவரத்திற்காக  பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
























SHARE

Author: verified_user

0 Comments: