வின்சன் மகளிர் தேசிய பாடசாலை வரலாற்றிலேயே 56 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்று சாதனை.
கல்வி அமைச்சினால் 22 ஆம் ஆண்டுக்கான இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண பரிட்சை பெறுபவர்கள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைய கிழக்கு மாகாணத்திலேயே 56 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் இம்முறை பெற்று சாதனை படைத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த மாணவர்கள் சாதனையை கிழக்கு மாகாணத்தில் புரிந்துள்ளார்கள். பாடசாலை வரலாற்றிலேயே இது ஒரு சாதனையாகும்.
இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 99 விதமான மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
176 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றி இருந்த போதிலும். 56 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும். 19 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்திகளையும். 17 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்திகளையும், 2 பி சித்திகளையும். பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சமூகம் தந்து பாடசாலை சமூகத்திடமிருந்து தமது வாழ்த்துக்களை ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர். பாடசாலை அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment