மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் அவதியுறும் மக்கள்.
வடகீழ் பருவப் பெயற்சி மழை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவ வருகின்றது. இதனால் பல இடங்களில் மழை நீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள பெரியபோரிவு, பட்டாபுரம், முனைத்தீவு, கோவில்போரதீவு, பழுகாமம், உள்ளிட்ட பல கிராமங்களில் மழைநீர் வழிந்தோட முடியாமலுள்ளதானால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக அங்கலாய்க்கின்றனர்.
மழைவெள்ளம் வழிந்தோடுவதற்கு ஏற்ற வடிகான் வசதிகள் இன்மையால்தான் இவ்வாறு நீர் தேங்கியுள்ளதாகவும், இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கருத்திற் கொண்டு தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு முன்னரே வடிகான் வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்தி தேங்கியுள்ள மழை நீரை வழிந்தோடச் செய்வதற்கு உடன் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க கிராமங்களில் மழை நீர் தேங்கியுள்ளதனால் மக்களின் வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தற்காலிகமாக வீதியின் ஓரமாக நீர் வடிந்தோடுவதற்குரிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment