சாரணிய மாணவர்களுக்கான அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலய தேசிய பாடசலை சாரணிய மாணவர்களுக்கான அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்றது.இதன்போது தேசிய கொடி,பாடசாலை சாரணிய கொடி மற்றும் மாவட்ட சாரணிய கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சாரணிய சத்தியப் பிரமானம் செய்யப்பட்டு சாரணிய கனிஷட்ட பிரிவு மாணவர்களக்கு அங்கத்துவ சின்னம் மற்றும் மாவட்ட சின்னங்கள் என்பன சூட்டப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் சாரணிய மாணவர்கள் எவ்வாறு பாடசாலைகளிலும் மற்றும் வெளிப்புற சூழலில் முன்மாதிரியாக திகழ வேண்டும் என சாரணியம் தொடர்பான அறிவரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சணாமூர்த்தி மட்டக்களப்பு மாவட்ட சாரணிய ஆணையாளர் வி.பிரதீபன், மாவட்ட உதவி சாணிய ஆணையாளர்களான எ.ஜெயஜீவன், எம்.சந்திரசுசர்மன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment