15 Nov 2023

மட்டக்களப்பில் American ihub திறந்து வைப்பு.

SHARE


மட்டக்களப்பில்
American ihub  திறந்து வைப்பு.

மட்டக்களப்பு, கல்லடியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் American ihub புதன்கிழமை  (15.11.2023) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையமானது மாணவர்கள்,உயர்தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கற்கையில் திறனை வளர்த்துக்கொள்ளல், ஆங்கில அறிவினை மேம்படுத்தல், விசேடமாக இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான புலமை பரிசில்கள் வழங்குதல் போன்ற பல்வேறு அபிவிருத்திகளை மையப்படுத்தி  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமெரிக்க தூதரக பிரதானிகள்,கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க,ஆளுநரின் செயலாளர் L.P மதநாயக்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.
















 

SHARE

Author: verified_user

0 Comments: