6 Nov 2023

பாட்டனாரால் முடியாததை பேரனார் பெற்றுக் கொடுப்பார் என யாராவது சிந்தித்தால் அது நடக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்.

SHARE

பாட்டனாரால் முடியாததை பேரனார் பெற்றுக் கொடுப்பார் என யாராவது சிந்தித்தால் அது நடக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்.

ரம்பரை பரம்பரையாக பாட்டனாரால் முடியாததை பேரனார் பெற்றுக் கொடுப்பார் என யாராவது சிந்தித்தால் அது நடக்க முடியாது என்பதை என்னால் அடித்துக் கூறமுடியும். எனவே உலக நிலமை, பிராந்திய நிலமைகளையும் கருத்திற் கொண்டு மிகக் கவனமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களைப் பாதுகாத்து வழிநடாத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்றிறுக்கின்றது.

என கிராமிய வீதி அவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிவபுரம் முதலாம் குறுக்கு வீதி, மற்றும் மூன்றாம் குறுக்கு வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 32.7 மில்லியன் ரூபா செலவில் கொங்றீட் வீதியாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(03.11.2023) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது நாங்கள் அடிவாங்கி, ஓடி அகதிகளாக வந்தோம், அதுபோன்று உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் நேரில் கண்டோம்.  இதிலே அரசியலிலும், தனிப்பட்ட வாழ்விலும் நாம் கற்றுக் கொண்ட பாடம்தான், பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது வன்முறைகளால் அடைய முடியாது என்பது ஆகும். எங்களுடைய வாழ்விலும் அதைத்தான் நாமும் கற்றுக் கொண்டோம்.

என்னதான் பிரச்சனை என்றாலும் தீர்வு என்தை போச்சு வார்த்தையினால்தான் தீர்க்க முடியும். சிறிய பிரச்சனைகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரச்சனைகள், அல்லது நாட்டுக்குள் இருக்கின்ற அதிகாரப் பிரச்சனைகள், உள்ளிட்ட அனைத்திற்கும் பேச்சு வார்த்தை மேசையிலேயே தீர்வு காணமுடியும்.

இவ்வாறான நம்பிக்கையில்தான் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் உருவானது. இந்த ஜனநாயகப் பண்புகளுடாக ஒரு சரியான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு  எமக்கிருக்கின்றது. கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை மேசைகளில் அதிகாரப் பகிர்வு விடையங்களிலும், அல்லது பாராளுமன்றத்தைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக இருந்தாலும், பாராளுமன்றத்திற்குப் போட்டியிடுபவர்களைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக இருந்தாலும், எங்கிருந்தோ வந்த ஓர் கூட்டம் தீர்மானித்ததன் காரணமாகத்தான் நாம் அனைத்திற்கும் முகம் கொடுத்து அழிந்து போயிருக்கின்றோம்.

மீண்டும் அதே 60, 70 வருட ஆக்குரோசமான பேச்சு, சிங்கள மக்களிடமிருந்து தமிழர்களைப் பிரிக்கின்ற பேச்சு, ஏனைய  இனங்களோடு பகைமையை ஊட்டக்கூடிய பேச்சுக்கள், இன்னமும் இடம்பெற்று பழைய வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகின்ற நிலமை பட்டிருப்புத் தொகுதியில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையிட்டு நாங்கள் பார்த்துக் கவலையடைகின்றோம்.

ஆனால் பரம்பரை பரம்பரையாக பாட்டனாரால் முடியாததை பேரனார் பெற்றுக் கொடுப்பார் என யாராவது சிந்தித்தால் அது நடக்க முடியாது என்பதை என்னால் அடித்துக் கூறமுடியும். எனவே உலக நிலமை, பிராந்திய நிலமைகளையும் கருத்திற் கொண்டு மிகக் கவனமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களைப் பாதுகாத்து வழிநடாத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்றிறுக்கின்றது. இதனை வடக்குத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவிட்டாலும் எங்களது தலைவிதியை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் மக்கள் விடுதலைப புலிகள் கட்சி வந்திருக்கின்றது. இதனை நாம் பாதுகாத்து முன்னகர்த்தி எடுத்து எதிர்காலத்திலும் ஒரு பலம்மிக்க ஒரு கட்டமைப்பை நாம் நிலை நிறுத்திக் கொள்வதற்கு நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் .தயாநிதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மற்றும் வீதி அபிவிருத்தி அதிஅதிகார சபையின் பொறியியலாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.









 

SHARE

Author: verified_user

0 Comments: