3 Nov 2023

வாசிப்பு மாத பரிசளிப்பு விழாவும் களுவையூர் நாம் சஞ்சிகை வெளியீடும்.

SHARE

வாசிப்பு மாத பரிசளிப்பு விழாவும் களுவையூர் நாம் சஞ்சிகை வெளியீடும்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பொது நூலகமும் வாசகர் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழா வியாழக்கிழமை(02.11.2023) களுதாவளை பொது நூலகத்தில் நடைபெற்றது.

களுதாவளை பொதுநூலக வாசகர் வட்டத் தலைவர் .கோபாலபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைச் செயலாளர் .அறிவழகன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எஸ்.குகநேசன், மற்றும் களுதாவளையில் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் .சத்தியமோகன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

வாசகர் வட்டத்தால் களுவையூர் நாதம் எனும் சஞ்சிகை ஒன்று வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், வாசிப்பின் சிறப்புக்கள் பற்றி அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

இதன்போது களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையி மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டு, தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும், சிறந்த தினசரி வாசகருக்கான கௌரவிப்பும் வழங்கி வைக்கப்பட்டன.























SHARE

Author: verified_user

0 Comments: