3 Nov 2023

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள் மக்கள் பெரும் பதட்டத்தில்.

SHARE

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள் மக்கள் பெரும் பதட்டத்தில்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு வாவியில் நீதி எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் வெள்ளிக்கிழமை(03.11.2023) அதிகாலை உட்புகுந்துள்ளதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலுள் உள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் இக்காட்டு யானைகள் மட்டக்களப்பு வாவியை நீந்தி களுதாவளைக் கிராமத்திற்குள் உட்புகுந்தள்ளன. இவ்வாறு கிராமத்திற்குள் உட்புகுந்த இரு காட்டு யானைகளும், தோட்டங்களையும் வீட்டு வேலிகளையும், துவம்சம் செய்துவிட்டு கடற்கரைப் பகுதியூடாகச சென்று தேத்தாத்தீவு கடற்கரையில் அமையப்பெற்றுள்ள சவுக்கு பற்கை; காட்டினுள் தங்கிளுள்ளன. பின்னர் பொதுமக்கள் ஒன்றிணைந்து காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு முனைந்தபோது அதற்கு இடம்கொடுக்காத யானைகள் மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் உட்புந்துள்ளன.

இந்நிலையில அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் அல்லோல கல்லோலப் பட்டுள்ளதோ, தமது தோட்டங்களுக்கும் காலை வேளையில் நீர் பாய்ச்சுவதில் பெரும் அச்சத்தையும் சிரமங்களையும் எதிர் கொண்டிருந்தனர்.

தற்போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்கள உத்தியோகஸ்த்தர்கள் இஸ்த்தத்திற்கு விரைந்து கடற்கரையில் அமைந்துள்ள சவுக்குமர பற்றைக் காட்டினுள் தரித்து நிற்கும் யானைகளுக்கு சத்தமிட்டு கோபம் ஏற்படுத்தாது அங்கு கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

எனினும் காட்டு யானைகள் படுவாங்கரைப் பகுதியிலிருந்து எவ்வாறு கடற்கரையை அண்டியுள்ள எழுவாங்கரைப் பகுதிக்கு உட்பகுந்ததோ அதே பாதையூடாக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக இதன்போது வருகை தந்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.














 

SHARE

Author: verified_user

0 Comments: