மட்டு முயற்சியான்மை உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி.
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் மட்டு முயற்சியான்மை எனும் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் மழைவீழ்ச்சிக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் சிறுதொழில் அபிவிருத்தி முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் உள்ளுர் கைத்தொழில் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் அரச அதிகாரிகளுக்கும் அங்கு பயன்பெறவரும் பொது மக்களின் நலன்கருதி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மட்டு முயற்சியான்மை எனும் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேசமட்ட விற்பனை கண்காட்சி இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்விற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர். ஏ.வாசுதேவன் கலந்து கொண்டு உள்ளுர் உற்பத்தி கண்காட்சியினை பார்வையிட்டார். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் இந்த மட்டு முயற்சியான்மை என்னும் விற்பனை கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த விற்பனை கண்காட்சி கூடத்தில் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட உடு துணிகள், புத்தகப்பைகள் பல சாறு வகைகள், அலங்கார மரக்கன்றுகள்ஈ மண்ணின் பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் நஞ்சற்ற உணவு வகைகள், மாவட்டத்தின் அழகினை எடுத்துக் கூறும் சிற்பங்கள், என பலதரப்பட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்.
0 Comments:
Post a Comment