மட்டக்களப்பில் சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு கெடட் படையணி மாணவர்களுக்கு விளையாட்டு.
38 வது படையணியின் தேசிய கெடட் குழுவினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு விஷேட விளையாட்டுக்கள் இடம் பெற்றது.
மட்டக்களப்பு புதுமுகத்துவாரம்
இக்னேசியஸ் பாடசாலையில் 38 வது தேசிய படையணியின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி
லெப்டினன்ட் கேணல் ஜீ.டபிள்யூ. ஜீ. எச். நிலாந்த தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு
மாவட்டத்தில் இருந்து சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவியர் சமூகத்தில்
ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களை தயார்ப்படுத்துவதுடன்
தலைமைத்துவப் பண்புகளுடன் ஒழுங்க விழுமியங்கள் மிக்க பிரஜைகளை உருவாக்குவது இதன்
நோக்கங்களாகும். என இதன்போது லெப்டினன்ட் கேணல் ஜீ.டபிள்யூ. ஜீ. எச். நிலாந்த
தெரிவித்தார்.
இவ்விஷேட நிகழ்வில்
விளையாட்டுக்கும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளும் இடம்
பெற்றன.
இதன்போது இராணுவ பயிற்றுவிப்பாளர்களும்
பொலிஸ் பயிற்றுவிப்பாளர்களும் பயிற்சியுடன் கூடிய விளையாட்டுக்களை கெடட் படையணி மாணவர்களுக்கு
நடாத்தினர்.
0 Comments:
Post a Comment