20 Oct 2023

களுவாஞ்சிகுடி நகரில் முற்றாக முடங்கிய வர்த்தக நிலையங்கள்.

SHARE





களுவாஞ்சிகுடி நகரில் முற்றாக முடங்கிய வர்த்தக நிலையங்கள்.

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு இணங்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை(20.10.2023) கர்த்தால் அனுஸ்ட்டிக்கப்பட்டது. அதற்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரபல பொதுச்சந்தை மற்றும் அதனோடிணைந்த அனைத்து வர்த்தக நிலையங்களும், முற்றாக இயங்காமல் மூடப்பட்டுள்ளன. பிரதான வீதிகளில் அமைந்துள்ள ஏனை வர்த்தக நிலையங்கள், தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யும் கடைகள், சுப்பர் மார்கட், உள்ளிட்ட யாவும் இயங்கவில்லை.

எனினும் ஒரு சில தனியார் கம்பனிகளும், வங்கிகளும், திறக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு மக்கள் சேவைகளைப் பெறுவதங்குச் செல்வது மிக மிக குறைவாகவே காணப்பட்டன.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச பேரூந்துகள் சேவையிலீடுபடுகின்ற இநிலையில், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா கதுருவெல போன்ற தூட இடங்களுக்கான ஒருசில தனியார் பேரூந்துகள் சேவையிலீடுபடுவதையும் அவதானிக்க முடிந்தது.

தற்போது பாடசாலைமட்ட தவணைப் பரீட்சைகள் இடம்பெறுவதனால் மாணவர்களும், ஆசிரியர்களும், பாடசாலைகளுக்குச் சென்றுறிருந்ததோடு, அரச திணைக்கள காரியாலயங்களுக்கும் உத்தியோகஸ்த்தர்கள் கடமைகளுக்குச் சென்றிருந்தனர். எனினும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் அரச காரியாலயங்களுக்குச் நேற்றயதினம் சென்றது மிக குறைவாகவே காணப்பட்டன.

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைச் செயற்பாடுகள் வழமைபோன்று இயங்கியதுடன், தமது தேவைகளின் நிமிர்த்தம் முச்சக்கர வண்டி வட்டிகளும், ஒரு சில பொதுமக்களும் நடமாடியதையும் நேற்றயதினம் அவதானிக்க முடிந்தது.












SHARE

Author: verified_user

0 Comments: