22 Oct 2023

நெடியமடு கிராமத்திற்குள் காட்டுயானைகள் புகுந்து துவம்சம். வீடுகள் பயிர்கள் முற்றாக சேதம்.

SHARE

நெடியமடு கிராமத்திற்குள் காட்டுயானைகள் புகுந்து துவம்சம். வீடுகள் பயிர்கள் முற்றாக சேதம்.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில் காட்டு யானைகள் மக்களின் மூன்று வீடுகளையும் அவர்களது பயிர் நிலங்கள், தென்னை மரங்கள் போன்றவற்றையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை (21.10.2023) நள்ளிரவு 12 மணியளவில் நெடியமடு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள இரண்டு விவசாயிகளின் வீடுகளை உடைத்தும், நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை உண்டு, வீட்டில் இருந்த பொருட்களையும் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளன. இந்நிலையில் அங்கிருந்த பயன்தரும் தென்னை, பலா, வாழை, கத்தரி, மிளகாய், கீரை உள்ளிடட்ட பயிரினங்களையும் அழித்து துவசம் செய்துள்ளது

யானைகளின் அட்டகாசத்தார் ஏற்பட்ட சேதவிபரங்களை சம்பவ இடத்திற்கு சென்ற நெடியமடு கிராம உத்தியோகத்தர் கோபாலகிருஸ்ணன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் போன்றோர் பார்வையிட்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது எற்பட்டுள்ள இழப்புக்கள் தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.













SHARE

Author: verified_user

0 Comments: