மூசஸ்ரார் நிறுவனத்தினால் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலயத்திற்கு உதவி.
மட்டக்களப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலத்திற்கு மூசஸ்ரார் நிறுவனத்தினால் பல்வேறு உதவிகள் கடந்த வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் லண்டனிலுள்ள கல்தோபாக் பாடசாலை மாணவர்கள் இப்பாடசாலைக்கு வருகை தந்து முதல்நாள் சங்கீத அறையினைப் புனரமைத்து பாடசாலைக்குக் கையளித்தனர்.
இரண்டாவது நாள் அவர்கள் மேற்படி பாடசாலை மாணவர்களோடு இணைந்து மகிழ்ச்சிகரமான செயற்பாட்டில் ஈடுபட்டார்கள்.
மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (27.10.2023) பல்வேறு கிராமிய விளையாட்டுக்களில் பங்குபற்றினர்.
0 Comments:
Post a Comment