13 Sept 2023

இணையத்தின் பொதுச் சபைக் கூட்டம்.

SHARE


இணையத்தின் பொதுச் சபைக் கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 19.09.2023 அன்று வை.எம்.சி.. மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இணையத்தின் செயலாளர் எம்.ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

கந்த 06.05.203 அன்று நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தின்போது அமைக்கப்பட்ட இடைக்கால நிருவாகக் செயற்குழுவின் செயற்பாடுகள் மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதற்குரிய அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, காரியாலயத்திற்கான இடஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னர் 29.08.2023 இல் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதற்கிணங்க பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 19.09.2023 அன்று நடைபெறவுள்ளன.

இத்தில் கலந்து கொள்வதற்காக வேண்டி இணையத்தின் அனைத்து அங்கத்துவ நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக இணையத்தின் செயலாளர் எம்.ரகுநாதன் மேலும் தெரிவித்தார்.

 

SHARE

Author: verified_user

0 Comments: