27 Sept 2023

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற சர்வதேச சைகை மொழி தேசிய தின பிரதான விழிப்புணர்வு ஊர்வலம்.

SHARE

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற சர்வதேச சைகை மொழி தேசிய தின பிரதான  விழிப்புணர்வு ஊர்வலம்.

சர்வதேச சைகை மொழி தினத்தினை கொண்டாடுமுகமாக  செவிப் புலனற்றோர் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை(27.09.2023) மட்டக்களப்பு நகரில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு செவிப்புலனற்றோர் அலுவலகம் முன்பாக ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு திருகோணமலை வீதி வழியாக மட்டக்களப்பு நகரின் பல வீதிகளிலும் பயணித்த பின் மட்டக்களப்பு நகர மண்டபத்தை சென்றடைந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர்  சிவனேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டிருந்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில், நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வடக்கு மலையகம் தலைநகரம் என்ன பல பகுதிகளிலும் இருந்து. செவிப்புலனார் சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சர்வதேச சைகை மொழியின் முக்கியத்துவம், அவர்களுக்குரிய உரிமைகள் சம்பந்தமான பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.

தொடர்ந்து எழுச்சி கொண்டாட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றன. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் இளம்குமுதன்  வைபவ ரீதியாக இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். செவிப்புலனற்றோர் எங்கு வேண்டுமானாலும் சைகை மொழியை பயன்படுத்தக்கூடிய உலகம் உருவாக்க வேண்டும். என்ற தொணிப் பொருளில் இந்நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் ஆற்றுகை செய்யப்பட்டன.













SHARE

Author: verified_user

0 Comments: