22 Sept 2023

அம்பாறை மாவட்ட சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல்.

SHARE

(நூருல் ஹுதா உமர்) 

அம்பாறை மாவட்ட சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் கீழும் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் இளங்குமுதன் தலைமையில் இன்று காரைதீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமூக சேவை திணைகளத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் 19 பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலின் போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் பதிவு செய்யப்பட்டு செயற்பாட்டில் இல்லாத அமைப்புகளை அவர்களின் பதிவினை மீள் பரிசோதனை செய்து அவ்வாறான அமைப்புக்களை வரிதாக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அம்பாறை மாவட்ட பதிவு செய்யப்பட்ட சமூக சேவைகள் அமைப்பு மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய சம்மேளனம் உருவாக்கப்பட இருப்பதாகவும் மேலும் இவ்வாறான சம்மேளனம் ஏற்கனவே மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று முடிந்தது விட்டது. மேலும் தெரிவு செய்யப்பட இருக்கின்ற அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் பிறகு திருக்கோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் உள்ளடக்கிய சம்மேளன நிர்வாகிகளை வைத்து கிழக்கு மாகாணத்துக்குரிய சம்மேளனம் மிக விரைவில் உறுவாக்கப்பட இருப்பதாகவும் பணிப்பாளர் அவர்களால் இந்நிகழ்வில் வைத்து கருத்துரைக்கப்பட்டது. .

அதற்கமைய வருகை தந்த அமைப்புகளின்பிரதிநிதிகளை வைத்து அம்பாறை மாவட்டத்திற்குரிய சம்மேளனம் உருவாக்கப்பட்டது. தலைவர், செயலாளர் பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக உறுப்பினர்களாக 19 பிரதேச செயலகத்தையும் பிரதிநிதிதுவப்படுத்தி 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.








SHARE

Author: verified_user

0 Comments: