சமாதானம் நல்லிணக்கம், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை.
சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை தொடர்பில் மட்டக்களப்பிலிருந்து செயற்பட்டு வரும் வெய்ஸ் ஒவ் றைட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை(20,21) ஆகி இரு தினங்களும், சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் அமைந்துள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் மற்றும் இஸ்லாமிய இளைஞர் யுவதிகள் 25 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அப்றியல் நிறுவனத்தினதும், வெய்ஸ் ஒவ் றைட்ஸ் அமைப்பினதும் வளவாளர்கள் இதன்போது கலந்து கொண்டு இளைஞர் யுவதிக்குரிய பயிற்சிகளையும், விளக்கங்களையும் வழங்கியிருந்தனர்.
0 Comments:
Post a Comment