மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றம்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கட்கிழமை(21.08.2023) ஆரம்பமானது.
ஞாயிற்றுக்கிழமை வாஸ்து சாந்தி கிரியை நிகழ்வுகள் இடம்பெற்று திங்கட்கிழமை சுப முகுர்த்த வேளையில் வேதபாரயாணங்கள் ஓதி, மேள தாள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் ஆலயப்பிரதமக்குரு சிவத்திரு நவரெத்தின முரசொலிமாறன் குருக்கள் தலைமையிலான குழுவினரால் கொடியேற்றம் இடம்பெற்றது.
ஆலய இத்திருவிழாக்கள் தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெற்று, தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜைகள், மற்றும் சுவாமி உள்வீதி வெளிவீதி உலா வரும் நிகழ்வுகள் இடம்பெற்று எதிர்வரும் 2023.08.28 ஆம் திகதி வேட்டை திருவிழாவும், 2023.08.29 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 2023.08.30 சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
0 Comments:
Post a Comment