9 Aug 2023

களுவாஞ்சிகுடியில் ஆட்பதிவு சேவைகள் தொடர்பான நடமாடும் சேவை.

SHARE


களுவாஞ்சிகுடியில்
ஆட்பதிவு சேவைகள் தொடர்பான நடமாடும் சேவை.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்றுகளுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் 40 வயதிற்கு மேற்பட்ட பிறப்பு சான்றிதழ் அற்றோருக்கான அடையாள அட்டையினை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்னம் அவர்களின் தலைமையில் புதன்கிழமை; (09.08.2023) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது

பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாமல் இருப்போர் தொடர்பில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2023.12.31ஆம் திகதி இறுதி தினமாக கொண்ட சுற்றறிக்கைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் சேவையில் ஐந்நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைததாக பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்னம் தெரிவித்தார்.

இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையானது இன்றைய தினம் முதலாம் கட்டமாக மாங்காடு சமுர்த்தி வலயத்திற்குட்பட்ட மக்களுகள் நன்மைடைந்தனர். இந்நிலை யில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல்லாறு மற்றும் எருவில் வலயங்களுக்குட்பட்ட பொதுமக்களுக்குமாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















SHARE

Author: verified_user

0 Comments: