பெரும்பான்மை இனத்தவர்களாலும் பௌத்த பிக்குவாலும் தடுத்து வைக்கப்பட்ட 3 தமிழ் ஊடகவியளார்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக மட்டு நகரில் சகஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு பிரதேசத்தில் காலநடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் முகமாக செவ்வாய்கிழம(22.08.2023) களவிஜயம் மேற்கொண்டிருந்த சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர், மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கு அத்துமீறிய விவசாய நடவடிகைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையினத்தவர்களும், அங்கிருந்த பௌத்த மதகுரு ஒருவரும், சுற்றிவளைத்து தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவ்வாறு செய்தவர்களுக்கு உடன் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி மட்டக்களப்பு ஊடகவியலாளர்களால் செவ்வாய்கிழமை(22.08.2023) மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமையப் பெற்றுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் ஞாபகார்த்த நினைவுத் தூபியின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அங்கு அனுமதியற்ற முறையில் அமையப்பெற்ற விகாரையின் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினரே தடுத்து வைத்து ஊடகவியலாளர்களின் கமராகள் பறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.
நீண்ட காலமாக மயிலத்தமடு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காகவே செவ்வாய்கிழமை அக்குழுவினரது களவிஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பண்ணையாளர்களுடன் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடலினை மேற்கொண்டதன் பின்னர் திரும்பிச் செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருப்பவர்களும், அங்கிருந்த பௌத்த மதகுரு ஒருவரும் இனைந்து அனைவரையும் இக்குழுவினரை வழி மறித்துதுள்ளனர்.
பின்னர் ஊடகவியலாளர்களின் கமராக்களில் பதிவு செய்ய காட்சிகளை அழிக்கச் செய்து, உங்களை நீங்கள் வந்த வேனில் வைத்து எரித்து விடுவோம், இது எங்களது பிரதேசம், நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள், என அச்சுறுதி, பின்னர் இங்கு நடைபெற்ற சம்பங்கள் தொடர்பாக எதையும் வெளியில் சொல்லக்கூடாது என வெற்றுத்தாழில் iகெயொப்பம் பெற்றுள்ளனர். பின்னர் மிக நீண்ட நேரத்திற்குப்பின்னர் மாலை வேளை அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளைப் பெற்றபின்னர் ஒருவாறு அக்கும்பலிடமிருந்து அக்குழு மீண்டும் செவ்வாய்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்துள்ளனர்.
இவ்விடயம் அறிந்த மாவட்டத்தின் ஏனைய சக ஊடகவியாளர்கள் மயிலத்தமடுவிற்குச் சென்ற குழுவினர் தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தடுப்பில் ஈடுபட்டவர்கள் மீது உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பின் ஊடகசங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment