3 Aug 2023

மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா - 2023

SHARE

(ஸோபிதன்)

மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா - 2023

ஆரம்பம் - 23.08.2023 புதன்கிழமை

நிறைவு - 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை

தீ மிதிப்பு - 27.08.2023 காலை 7.00 மணிக்கு இடம்பெறும்.

அன்னை வீரமாகாளி அம்மன் அருள் வேண்டி நிற்கும் மெய்யடியார்களே!

ஆலய சக்தி விழாவில் கலந்து கொண்டு அம்பாளின் அருளினை பெற வருமாறு உங்களை வேண்டுகின்றார்கள் ஆலய பரிபாலன சபையினரும் நவசக்தி மன்றத்தினரும்.

மேலும் ஆலயத்தில் தினப்பூசை  பி.ப 1.00 மணிக்கும் , பௌர்ணமி விசேட பூசை பி.ப 1.00 மணிக்கும், வெள்ளிக்கிழமை கூட்டு வழிபாட்டு  பூசை பி.ப 6.00 மணிக்கும் நடைபெறும்.

மேலும் ஆலய விழாக்களின் போது ஆலயத்திற்கு தேவையான பூசை பொருட்களினை தந்துதவுவதோடு பூக்கள் , பூமாலைகள், மற்றும் பழங்கள் என்பவற்றை தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஆலய பூசை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு,  அன்னதான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வருமாறு அம்மன் மெய்யடியார்களை வேண்டி நிற்கின்றார்கள் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஆலய நவசக்தி மன்றத்தினர் .

இவ்வண்ணம்

ஆலய பரிபாலன சபையினரும்

நவசக்தி மன்றத்தினரும்

செட்டிபாளையம்.



SHARE

Author: verified_user

0 Comments: