(மு.அ.மு.சிஹாம்)
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் சமூக செயற்றிட்டமான Cultural Café நிகழ்ச்சித்திட்டம்.
இளைஞர் சமூக தலைமைத்துவ முன்னெடுப்பின் “கல்ச்சரல் கபே" (Cultural Café) நிகழ்வொன்று பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையே கலாசாரம் பற்றிய விழிப்புணர்வையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் நோக்கில் பல்கலாசார சமூகம் வாழக்கூடிய கிழக்கு மாகாணத்தில் பழமையான கலாசார பிண்ணணியைக் கொண்ட ஐந்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டு இந்நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் திருகோணமலை கோமரங்கடவல, பிரதேசத்தில் ஆரம்பமான இந்நிகழ்ச்சித் திட்டம், சம்மாந்துறை நெயினாகாடு, அம்பாரை மாவட்டத்தின் மஹா ஒயா பொல்லபெத்த, தமிழ் வேடுவர்கள் வசித்துவரும் வாகரை குஞ்சங்கற்குளம், போன்ற “Culture Café" நிகழ்ச்சித்திட்ட சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு இறுதி நிகழ்வு மட்டக்களப்பு மாவிலங்கத்துறையில் செவ்வாய்க கிழமை (18.07.2023) நிறைவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலாசாரத்தின் கூறுகளான பிரதேச மக்களின் நம்பிக்கைகள், பொருளாதார முயற்சிகள், வரலாறுகள், அவர்களது உடை, திருமண நடைமுறைகள், கலையம்சங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களின் பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டு, சமய அனுஷ்டானங்களும், காண்பிக்கப்பட்டன.
மேலும் கலாசாரம், அதன் தாக்கம் பற்றிய திறந்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளின் மூலம் மக்களின் கலாசாரங்களை விளங்கிக்கொண்டு அவற்றிற்கான கௌரவத்தையும் மதிப்பையும் வழங்குவதன் ஊடாக பல்வேறு சமூக மக்களிடையே புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும், கட்டியெழுப்புவதற்கான சாத்தியமானதொரு வேலைத்திட்டமாக அமைந்துள்ளது.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர், யுவதிகள் அர்பணிப்புடன் முன்னெடுத்துள்ளனர்
இச்செயற்பாட்டுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வண்ணம் அப்பகுதி அரச அதிகாரிகள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இத்திட்டத்திற்கு UNDP, WHO, UNV, போன்ற ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்களும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் அனுசரணை வழங்கியுள்ளது.
மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி கலாசாரமாகும் எனவும், பல் கலாசார சமூகம் வாழும் நாட்டில் இது போன்ற சமூக கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும், இத்தகைய செயற்றிட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவையும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் இதன்போது தெவித்தனர்.
0 Comments:
Post a Comment