மண்முனைப் பற்றில் இடம்பெற்ற தேசிய சுற்றாடல் தின நிகழ்வு.
தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழி மாசாக்கம் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களைக் குறைக்கும் செயற்றிட்ட விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்ப மாவட்டம் மண்முனைப் பிரதேச சபையினால் மே 31 அன்று ஆரையம்பதி பிரதான வீதியில் துவிச்சக்கரவண்டி மற்றும் நடை பவணி நிகழ்வும் இடம்பெற்றது.
பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்கும் முகமாக ஆரையம்பதி பொது சந்தையில் கடதாசிப் பைகள் விநியோக நிகழ்வும் இதனோடிணைந்த வகையில் நடைபெற்றது.
இதில் பிரதேசசபைச் செயலாளர் சர்வேஸ்வரன், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கணணி நிலைய மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment