தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டம் – 2023 "உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு தினம் "
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தின் ஏத்தாளைக் குளத்தை மையப்படுத்தியதாக "உயிர்ப்பல்வகைமையும், ஏத்தாளைக் குளமும்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வு என்பன வெள்ளிக்கிழமை (02.06.2023) இடம்பெற்றது.
கிராம பொதுமக்களுக்கும்,
பொது அமைப்புகளுக்கும் இந்த ஏத்தாளைக் குளத்தின் பெருமையை வெளிக்கொண்டுவரும்
முகமாக பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி ரஜனி பாஸ்கரன் அவர்களால் "உயிர்ப்பல்வகைமையும், ஏத்தாளைக் குளமும்"
எனும் தலைப்பிலான விழிப்புணர்வு கருத்துரை மேற்கொள்ளப்பட்டதுடன், அதனை தொடர்ந்து கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் குளத்தை சுற்றிவர சிரமதானம்
முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி
பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், அலுவலக உத்தியோகத்தர்கள் , ஆலயங்களின்
பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வினை குருக்கள்மடம்
ஐயனார் ஆலயம் மற்றும் செல்லக்கதிர்காம ஆலயத்தின் நிர்வாகத்தினர் இணைந்து ஒழுங்கமைப்பு
செய்திருந்தமை குறிப்பிடடத்தக்கது.
0 Comments:
Post a Comment