கிராமத்தை நோக்கி வடியும் கடல் நீர்.
திங்கட்கிழமை(15.05.2023) மாலை களுதாவளைப் பகுதியில் கடல் நீர் உட்புகுந்ததால் அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியியுள்ளது.
கடல் நீர் திடீரென கிராமத்தை நேக்கி மேலெழுந்து வருவதை அவதானித்த மீனவர்கள் தமது தோணி, படகுகள், உள்ளிட்ட மீன்பிடி உபகரங்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.
எனினும் கடல் நீர் தொடர்ந்தும் கிராமத்தை நோக்கி வடிந்து கொண்டிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வருடாந்தம் இக்காலப்பகுதியில் கடல்நீர் பெருக்கெடுப்பதாகவும், அது இம்முறை சற்று அதிகமாகக் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், தேத்தாதீவு, மற்றும் செட்டிபாளையம் போன்ற பல பகுதிகளிலுமுள்ள கடற் பிராந்தியங்களிலும், இவ்வாறு கடல் நீர் கிராமங்களை நோக்கி உட்புகுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment