களுவாஞ்சிகுடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு.
வடக்கு கிழக்கு ரீதியில் பல்கலைக் கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆங்காங்கே வழங்கப்பட்டு வரப்படும் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் வைத்து திங்கட்கிழமை(15.05.2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மண்மனை தென் எருவில் பற்று மக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.
முள்ளிவாய்காலில் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை விளக்கும் வகையிலாக எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் இதன்போது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment