17 May 2023

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் வாழைச் செய்கையாளர்களுக்கு 13 லெட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு

SHARE

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் வாழைச் செய்கையாளர்களுக்கு 13 லெட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல விவசாயச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் கவண்டிஸ் வாழைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுவதோடு விவசாயத்திணைக்களமும் அதனை ஊக்குவித்தும் வருகின்றது.

இச்செயற்றிட்டத்தின் கீழ் பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவின்கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு செவ்வாய்கிகழமை(16.05.2023) 13 இலெட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களும், விவசாய உள்ளீடுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்நிழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதே செயலாளர் ஆர்.இராகுலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, உவிப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், மாவட்ட திட்ட இணைப்பாளர் பிரதீபன், விவசாய நவீனமயமாக்கல் திட்ட உத்தியோகஸ்த்தர், மற்றும் விவசாய போதனாசிரியர்கள், விரிவாக்கல் உத்தியோகஸ்த்தர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இத்திட்டத்தின் மூலம் அறுவடை செய்யப்படும் வழைக்குலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது கலந்து கொண்ட விவசாய அதிகாரிகள் தெரிவித்தனர்.


























SHARE

Author: verified_user

0 Comments: