3 May 2023

கிழக்கு மாகாணத்தின் அரசியல் பிரச்சனை என்பது வேறு - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்)

SHARE

கிழக்கு மாகாணத்தின் அரசியல் பிரச்சனை என்பது வேறு - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்).

கிழக்கு மாகாணத்தின் அரசியல் பிரச்சனை என்பது வேறு கிழக்கிலுள்ள சனத்தொகை பரம்பல் அதிலே உள்ள தமிழ் மக்களின் பிரச்சனை, 75வருடகால வரலாற்றிலே யாழ்ப்பாண தலைவர்கள் எடுத்த முடிவின் தோல்வி காரணமாக பலவீனப்பட்டிருக்கின்றது. எமது சமூகம். அந்த பலவீனததையும் கட்டியெழுப்பிக் கொண்டு, 75 ஆண்டுகால வரலாற்றிலே எங்களை முந்தி நிற்கின்ற கல்வித்துறையையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய மிகப் பெரிய சவாலுக்குள் நிற்கிறோம். அதற்குள்தான் தற்போது ஐரோப்பா, ஆசியா, உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், இடதுசாரிக் கொள்கையின்பால் வளர்ந்து நிற்கின்ற நாடுகளின் தாக்கம்இதனை எவ்வாறு பாதிக்கின்றது என்பதோடு, இதனைக் கையாண்டு இலங்கையைப் பாதுகாப்பதோடு, கிழக்கிலுள்ள எமது மக்களின் இருப்பு, கலை காலாசாரங்களையும் பாதுகாக்க வேண்டிய மிகப் பொரிய பொறுப்புமிக்க கட்டத்தில் நாங்கள் நிற்கினறோம்.

என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான, சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டம் திங்கட்கிழமை(01.05.2023) மட்டக்களப்பு களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்

மீண்டும் மீண்டும் இனவாதப் பேச்சக்களைப் பேசுகின்ற கூட்டம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பட்டிருப்புத் தொகுதியில் கடந்த காலங்களில் இருந்தவர்கள் பாலம் வேண்டாம் சிங்களவர்கள் வந்து விடுவார்கள், தமிழர்களை சிங்களம் கற்க வேண்டாம் என தெரிவித்தவர்கள், தற்போது அவர்களின் வாரிசுகள் வந்து அவர்கள் எதையெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்களோ அதற்கு தலைகீழாக மாறி அதனையெல்லம் பயன்படுத்தி எமது மக்களை பகடைக்காயாக பாவிக்கின்ற சூழல்தான் தற்போது மட்டக்களப்பு அரசியல் மாறியிருக்கின்றது.

இவ்வாறான சதிகளிலிருந்து எமது மக்களைக் காத்துக் கொள்வது எமது மண்ணுக்கான மாண்மீயத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பது தொடர்பில் மிகக் கச்சிதமாகச் சிந்தித்து முன்னேற வேண்டிய காலகட்டத்தில்தான் நாங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். காணிப்பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல், பட்டிருப்பு பாலம் தற்போது உடைந்து விழும் அபாயத்தில், உள்ளது. எனவே நான் பொறுப்பு மிக்க அமைச்சர்  என்ற ரீதியில் பட்டிருப்பு பாலத்தையும், சந்திவெளி பாலத்தையும், ஒரு வெளிநாட்டுத் திட்டத்தின் கீழ் செப்பனிடுவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

தற்போதைய அரசாங்கத்தினூடாக அடுத்து வருகின்ற வருடங்களில் கல்வி, பொருளாதாத நிலமைகளையும் நாங்கள் மீட்டெடுக்க முடியும் என நம்பகின்றோம். எனவே எமது மக்கள் சலித்து விடவேண்டாம் மக்களுக்கு வாக்குறுதியளித்தது போன்று நாம் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தை தொடர்ந்து பாதுகாப்போம். எமக்கள் எமக்களித்த வாக்கின் பிரகாரம் தற்போது நான் அரச பிரதிநிதி என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது கட்சி அடைய முடியாத இலக்குகளுக்காகப் போராடாமல் மக்களை இரத்தம் சிந்த வைக்காமல் ஜனநாயக ரீதியாகப் போராடி கையிலே இருக்கின்ற மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற விடையங்களில் கவனம் செலத்துமே தவிர இன்னுமே மக்களை மடையர்களாக்குகின்ற செயல்பாடுகளுக்கு கட்சி ஆதரவு வழங்காது.

எனக்கு 3 வயதிலே இந்த நாட்டில் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனது 40 வயதில் அந்த சட்டத்தால் கைது செய்யப்பட்டு 5 வருடங்கள் சிறையிலிருந்து 45 வயதில் வெளியே வந்தேன். பயங்கரவாத தடைச் சட்டம் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்திருக்கின்றேன். அச்சட்டம் பற்றி மக்களும் அறிவார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாத சட்டமாகும். இருந்தாலும் உலகத்திலே எங்கேயும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறக் கூடாது, பயங்கரவாதிகள் மக்களுக்குச் சவால்விட முடியாது, மக்களால் வழங்கப்பட்ட இறைமையின் ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது என்பது உலக சவாலாக மாறியிருக்கின்ற சூழலிலே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பதை நாமும் எமது கட்சியும் எவ்வாறு கையாளப்போகின்றது, மக்களும், புத்திஜீவிகளும்ஊடகங்களும், சொல்வது போன்று ஜனநாயக இயக்கத்திற்கும், மக்களின் எழுச்சிகளுக்கும், அச்சட்டம் தடையாக அமைந்துவிடக் கூடாது, அவற்றுக்காக நாம் நிற்சயமாக எதிர்ப்பைத் தெரிவிப்போம். ஆனாலும் சஹறான் ஏற்படுத்திய குண்டு வெடிப்புக்கள் போன்று மக்கள் அவற்றுள் அகப்படாமலிருப்பதற்கும், பயங்கரவாத நிலமைகள் வராமலிருப்பதற்கும், தடுப்பதும் ஒரு அரசினுடைய கடமையாகும்.

எதிர்கட்சியிலிருப்பவர்கள் அதனை எதிர்க்கலாம். ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தின் வலிகளை வைத்துக் கொண்டு அதனை முழுமையாக எதிர்க்க முடியாது. அதிலும் நலிவடைந்திருக்கின்ற எமது கல்வி, பொருளாதாரங்களைச் சீரழிக்கின்ற போராட்டங்களை நடாத்த முடியாது. மாறாக மக்களிடம் வாக்கு பெறும் வரைக்கும் தமிழன், தமிழன் என கத்துவார்கள், அண்மையில் தமிழ் கட்சிகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் எந்த தமிழ் தலைவரும் தமிழிலே கையொப்பம் இடவில்லை, இதுதான் வேடதாரிகள் என்கின்ற விடையம். தமிழை உலகத்திலே அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஆக்குவதற்கு ஒறுமே செய்துவிட்டுச் செல்வதில்லை.

இந்த நிலையில்தான் வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவு கிழக்கு மாகாணத்தில் சாத்தியமில்லை என்று துரத்தியடிக்கின்ற ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் பலம் பெறவேண்டும். கிழக்கு மாகாணத்தின் அடுத்த கட்ட தலைவிதியைத் தீர்மானிக்கின்ற தலைவர்களை, உழைப்பாளர் வர்க்கத்திலிருந்து கண்டு பிடித்து அவர்களைத் தலைமையாக்கி விடுவதுதான் எமது கட்சியினுடைய பணியாகும்.

அண்மையில் என்னை ஏளனம் செய்தார்கள் அவர்கள் ஏளனம் செய்தாலும், நாங்கள் வந்த வழிகளை என்றும் மறப்பது கிடையாது. நான் பேத்தாழையில்தான் பிறந்தேன் அங்கு நான் மீன் பிடிக்க வேண்டிய பிள்ளையான் மக்கள் மத்தியில் ஒரு இராஜாங்க அமைச்சராக உள்ளேன். ஆடுகளையும், மாடுகளையும் மேய்த்து விவசாயம் செய்யவேண்டிய பிள்iயான் 75 வருட தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலே மட்டக்களப்பிலிருந்து சவால் விடுமளவிற்கு நாங்கள் வளர்ந்திருக்கின்றோம். எமது பாரம்பரிய சமூகத்தின் வேடுவ சமூகத்தின் வாரிசாக வந்திருக்கின்ற பிள்ளையான் பிரபல சட்டத்தரணிகளையும், நீதி அரசர்களையும் வாரிசு அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றவர்களை கதறவிட்டு எங்கு சென்றாலும் பிள்ளையான், பிள்ளையான் என கோசமிடுகின்ற அளவிற்கு அவர்களைத் தள்ளியிருக்கிறோம். அவை அனைத்தும் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற தொழிலாளர்களும். தொழிலாளர் வர்க்க பிள்ளைகளும் எமக்குத் தந்த ஆணையாகும். இந்த கௌரவம் இந்த மக்களைத்தான் சாரும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடியதும் நான்தான் தற்போது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற நாமத்தோடு, மக்களுககுச் சரியான பணியைச் செய்து கொடுப்பதும் நாங்கள்தான். என அவர் இதன்போது தெரிவித்தார்.SHARE

Author: verified_user

0 Comments: