26 May 2023

நாற்று மேடை உற்பத்தியாளர்களுக்கான தொழிநுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு.

SHARE

நாற்று மேடை உற்பத்தியாளர்களுக்கான தொழிநுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு.

பாராளுமன்ற உறுப்பினரும். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும். ராஜாங்க அமைச்சருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன், அவர்களாலும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான  இராசமாணிக்கம் இராஜபுத்திரன் சாணக்கியன், அவர்களாலும் விவசாயத் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நாற்றுமேடை அமைத்து நாற்றுக்கள் விற்பனை செய்யும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கு தீர்வு காணும் பொருட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளரின் அனுசரணையுடன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நாற்று மேடை உற்பத்தியாளர்களுக்கான தொழிநுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு. விழிப்புணர்வு நிகழ்வு வியாழக் கிழமை (25.05.2023 நடைபெற்றது.

இதில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, உதவி பிரதேச செயலாளர் களுவாஞ்சிகுடி, தெற்கு உதவி விவசாயப் வலய பணிப்பாளர் சி.சித்திரவேல் மற்றும் களுவாஞ்சிகுடி பிரிவிற்குரிய விவசாயப் போதனாசிரியர்கள். விதை அத்தாட்சிப் படுத்தும் சேவை நிலையத்தின் பொறுப்பதிகாரி, மற்றும் நாற்று மேடை உற்பத்தியில் ஈடுபடும் ஐம்பது விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: