மண்முனைப் பற்றில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி, காங்கேயனோடை போன்ற கிராமங்களிலும், டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ள பல பகுதிகளிலும் பிரதேச சபை அலுவலத்திலும், செவ்வாய்கிழமை(16.05.2023) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மண்முனைப் பிரதேச சபையின் செயலாளர் யோ.சர்வேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆரையம்பதி பொது சுகாதார வைத்திய அரிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், வங்கி முகாமையாளர், உத்தியோகத்தர்கள் முப்படையினர் காங்கேயனோடை சனசமூக நிலைய உறுப்பினர்கள் பொது மக்கள் பங்குபற்றியிருந்தனர். இதன் மூலம் டெங்கு பெருகக்கூடிய பல இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment