16 Apr 2023

பத்து நாட்களுக்குள் மூன்று பேர் புகையிரதத்தில் மோதுண்டு பலி.

SHARE

பத்து நாட்களுக்குள் மூன்று பேர் புகையிரதத்தில் மோதுண்டு பலி.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர்  பலியாகியுள்ளார்.

ஏற்கனவே 03.04.2023 மற்றும் 10.04.2023 யிலும் இருவர் பலியாகியிருந்தனர்மட்டக்களப்பிலிருந்து  வியாழக்கிழமை   இரவு  8.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் மோதியே பலியாகியிருக்கலாம் மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரணித்தவர் சத்துருகொண்டான்> பாடசாலை வீதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இராமசாமி ரமேஷ்காந் (44) என அவரது மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் அடையாளம் காட்டினர்.

வெள்ளிக்கிழமை (14.04.2023) அதிகாலை 1.35 இற்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்தவர்களே குறித்த சடலத்தை  கண்ணுற்று அறிவித்ததைத் தொடர்ந்தே  சடலத்தை மீட்க மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த  ஏறாவூர் திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் குறித்த சடலத்தை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிசாரை பணித்ததுடன்>உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நெருங்கிய  உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்குள் மூன்று பேர் புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.







 

 

 

 

SHARE

Author: verified_user

0 Comments: