குருமண்வெளி – மண்டூர் படகுப் பாதையில் பயணம் செய்வோரிடத்தில் திடீரென நிதி அறவீடு செய்வதால் மக்கள் எதிர்ப்பு.
இதுவரைகாலமும் எதுவித கொடுப்பனவுகளையும் செலுத்தாமலேயே அப்பாதையினூடாக பிரயாணிகள் தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும் கடந்த 01.04.2023 அன்றிலிருந்து இப்படகுப்பாதையில் போக்குவரத்துச் செய்யும் பயணிகளிடம் கட்டணம் அறவிடப்படம் என கட்டண விபரங்கள் அடங்கிய பாதாகை ஒன்று வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எந்திரி.ஏ.எம்.றிஸ்வி அவர்களால் விளம்பரம் இடப்பட்டிருந்தது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததையடுத்து. கடந்த முதலாம் திகதி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் குறித்த போக்குவரத்து மார்க்கத்தில் ஈடுபடும் 2 படகுகளும், முற்பகல் 11.30 மணிவரையில் வேவையிலீடுபடவில்லை. தாம் இதுவரையில் எதுவித கட்டணங்களும் செலுத்தாமலேயேதான தமது போக்குவரத்துக்களை இதில் மேற்கொண்டு வந்ததாகவும், இன்றிலிருந்து நிதி அறவீடு செய்யும் நடைமுறையை வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட வேண்டும் எனவும், இதற்கு தாம் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் பயணிகளும், பொதுமக்களும் கருத்துத் தெரிவித்தனர்.
எனினும் தமக்கு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் பெயரிலேயே நிதி அறவீடு செய்வதாக அவ்விடத்திலிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் ஒருவரும், நிதி வசூலிப்பில் ஈடுபட்ட உத்தியோகஸ்த்தர்களும், தெரிவித்தனர். பின்னர் அவ்விடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரயாணிகளுடனும், பொதுமக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். பொதுமக்களுக்கு அமைதியான முறையில் தமது உரிமைகளைக் கேட்பதற்கு உரிமையுள்ளது. ஆனால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை, நிதி அறவீடு செய்வதை தடை செய்ய வேண்டுமாக இருந்தால் உரிய அதிகாரிகளுக்கு மக்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை வழங்க முடியும். எனவே மக்கள் குறித்த பாதையில் போக்குவரத்துச் செய்வதக்கு யாரும் தடை ஏற்படுத்த முடியாது என தெரிவித்து பாதைய சேவையிலீடுபடுத்துமாறு தெரிவித்ததங்கிணங்க, மக்களின் எதிர்பதையும் மீறி பற்றுச் சீட்டு வழங்கி நிதி வசூலித்த பின்னர் மக்கள் குறித்த பாதையில் போக்குவரத்து தொர்ந்து இடம்பெற்றது.
பயணிகள்(12 வயதிற்கு மேற்பட்டவர்கள்) 10 ரூபா, துவிச்சக்கர வண்டி ஒருவருடன் 30 ரூபா, மோட்டார் ஓட்டுனருடன் 50 ரூபா, ஆட்டோ ஓட்டுனருடன் 100 ரூபா, கார், வேன், பிக்கப் ஓட்டுனருடன் 250 ரூபா, வும் அறவீடு செய்யப்படுவதுடன், சீருடையுடன் வரும் பாடசாலை மாணவர்களுக்கும், அரச வாகனங்களுக்கும் இலவசமாகவும் பணயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருமண்வெளி – மண்டூர் ஓடத்துறைக்கு நிரந்த் பாலம் அமைப்பதற்காக வேண்டி கடந்த காலங்களில் பல தடவைகள் அடிக்கல் நடப்பட்ட நிலையிலும் அது இதுவரையில் கைகூடாத நிலையிலேயே இருருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment