25 Mar 2023

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

SHARE

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் முதலாம் தர  மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு கல்வி   வலயத்திலுள்ள  மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 1 க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) மிக சிறப்பாக இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் கே. பாஸ்கரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வின்போது தரம் 1 இல் கல்வி கற்பதற்கு புதிதாக வருகை தந்த மாணவர்களையும் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளையும்  மலர் மாலை அணிவித்து, பேண்ட் வாத்தியத்துடன் வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இறைவணக்கம் வரவேற்பு, நடனம் போன்ற நிகழ்வுகளுடன் பாடசாலை சமூகம், ஆசிரியர்கள், மாணவர்களால் புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் ரி.பார்த்தீபன், கிழக்கு பல்கலை கழக. விரிவுரையாளர் ரி. கெளரீஸ்வரன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எஸ்.சிவராசா, அகிம்சா தொண்டு நிறுவனத்தின் தலைவர் விஜயராஜா மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலைக்கு சிறந்த வரவைப் பேணிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.





SHARE

Author: verified_user

0 Comments: