10 Feb 2023

வவுணதீவில் 55, 500 மில்லி லிட்டர் கசிப்புடன் மூவர் கைது.

SHARE

வவுணதீவில் 55, 500 மில்லி லிட்டர் கசிப்புடன் மூவர் கைது.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 55,500 மில்லி லிட்டர் கசிப்பினை  கொண்டு சென்ற முவரை புதன் கிழமை (08) கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி  சமரசிங்க தெரிவித்தார்.

சின்ன காலபோட்டமடு பகுதியில் இருந்து ஆரையம்பதி பகுதிக்கு முச்சக்கரவண்டியில்  22,500 மில்லி லிட்டர் அளவு கொண்ட கசிப்பு கொள்கலனை மறைத்து வைத்து கடத்திச் சென்றே போது விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக முச்சக்கர வண்டியுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை விஷேட புலனாய்வு தகவலுக்கமைவாக, களிமடு - முருங்கையடி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் 33, 000 மில்லி லிட்டர்  கசிப்பினை விற்பனைக்காக எடுத்துச் சென்றே போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் இரு வாகனங்கள் மற்றும் கசிப்பு உள்ளிட்டவைகளை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாவும் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 





SHARE

Author: verified_user

0 Comments: