24 Jan 2023

பல்லினத்துவத்தை அங்கீகரித்து மதிப்பளிக்கும் ஊடகவியல் துறைக்கு உயிர்ப்பூட்ட வேண்டும் - பிரதீபன்

SHARE

பல்லினத்துவத்தை அங்கீகரித்து மதிப்பளிக்கும் ஊடகவியல் துறைக்கு உயிர்ப்பூட்ட வேண்டும் - பிரதீபன்.

இளம் சமுதாயத்தினர் பக்கச்சார்பு இல்லாத பல்லினத்துவத்தை பல்லுயிர்த் தன்மையை அங்கீகரித்து மதிப்பளித்து அவற்றை வாழ வைக்கும் நெறிமுறையை வளப்படுத்த வேண்டும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கள ஒருங்கிணைப்பாளர் எம்.பிரதீபன் தெரிவித்தார்.

பிரஜைகளின் அபிலாஷைகளை இனம் கண்டு அவற்றுக்கு மாற்றுத் தீர்வு காணக்கூடிய வழிவகைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் இளம் ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கும் செயலமர்வுகள்" இலங்கைளில் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சி நெறியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சமூக வலைத்தளப் பதிவர்களான இளம் ஆக்கபூர்வப் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(20) மற்றும் திங்கட்கிழமை 23.01.2023 ஆகிய இரு தினங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான ஊடக பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் அமைப்பின் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து மேலும் உரையாற்றிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கள ஒருங்கிணைப்பாளர் பிரதீபன் மனிதநேயம் மிக்க ஒரு சமூகத்தை வடிவமைப்பதில் இளம் சமூக ஊடகவியலாளர்களின் பங்கும் பணியும் காத்திரமானது. அதற்காக இளம் ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் மூலமாக பல்லினத்துவத்தை அங்கீகரித்து மதிப்பளிக்கும் ஊடகவியல் துறைக்கு உயிர்ப்பூட்ட வேண்டும்.

துரதிருஷ்ட வசமாக இலங்கையின் கல்வி முறைமையில் இந்த அணுகுமுறைகள் இல்லை. அதனை இதுபோன்ற பயிற்சி நெறிகள் தேடல் அறிவுகள் மூலம் இளைஞர் யுவதிகள் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்ளலாம்.

இலங்கைச் சமுதாயத்தினரை அவர்கள் எந்த இனம் மதம் சாதி மொழி என்றில்லாமல் வாழ வைக்கும் ஆக்கபூர்வ அபிவிருத்திப்; பங்காளர்களாக மாற்ற வேண்டும்.

அந்த நோக்கத்தை அடைய  மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உங்களுக்குக் கைகொடுக்கும். இதுவொரு நீண்ட காலப் பயணம் நாடுபூராகவும் 25 மாவட்டங்களிலும் இந்த பிரஜைகளின் குரவலாக இளம் ஊடகவியலாளர்கள் திகழ வேண்டும் என்ற நோக்கில் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பிரைஜைகளின் குரல் உருவாக வேண்டும். அதைத் தேசிய மட்டத்திற்கும் எடுத்துச் செல்வோம்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சிறுபான்மையினரின் உரிமைகளில் கரிசனை கொண்டுள்ளது. மும்மொழியை அமுல்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கத்துக்கும் நாம் அழுத்தங்களைக் கொடுக்கிறோம். வழக்குகளைத் தாக்கல் செய்து அவற்றை எதிர்கொண்டு வருகின்றோம்.

சம்பிராதாய ஊடகக் கலாச்சாரத்திலிருந்தும் அரசியல் கட்சிகளைச் சார்ந்து கொத்தடிமைகளாக இருப்பதிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமான நேர்மையான ஆக்கபூர்வமான ஊடகவியலாளர்களாக உருவாகுங்கள் என்றார்.

இந்தப் பயிற்சி நெறியில் ஊடகம்திரைத்துறைஒளிப்பதிவு போன்றவற்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் நடராஜா மணிவாணன் மற்றும் நிக்கி தொம்ஷன்உட்பட இன்னும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.



















SHARE

Author: verified_user

0 Comments: