வீட்டை உடைத்து கொள்ளையிட்ட நபர்கள் இருவர் கைது—பொருட்களும் பொலிசாரால் மீட்பு.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஹைராத் நகரில் வீடொன்றை
உடைத்து கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி
பொலிஸ நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
சனிக்கிழமை(31) மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு
கல்முனை கடற்கரை பள்ளிவாயல் மௌலீது வைபத்திற்குச் செனறு விட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை(01)
அதிகாலை 1.00 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவை உடைத்து பொருட்களைக்
கொள்ளையிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது..
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு
பிரிவு பொறுப்பதிகாரி மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (02)
காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து
இரண்டு கேஸ் சிலிண்டர்கள் ஒரு டெப் கணணி ஒரு கையடக்க தொலை பேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பொலிசார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment