களுவாஞ்சிகுடி வரலாற்றுக் குழு ஏற்பாடு செய்திருந்த பரிசழிப்பு விழா.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி வரலாற்றுக் குழு ஏற்பாடு செய்திருந்த பரிசழிப்பு விழா களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் சனிக்கிழமை(31) நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி வரலாற்றுக் குழுவின் ஏற்பாட்டாளரும், வரலாற்று ஆசிரியருமான த.ஐங்கரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ.கோபாலரெத்தினம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வரலாற்றுப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பானர் செ.சுரேஸ், மற்றும் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
அப்பிரதேசத்திலிருந்து கடந்த வருடத்தில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதுபோன்று தாம் தொடர்ந்து 5 வருடங்களாக பரிசழிப்பு நிகழ்வை மேற்கொண்டு மாணவர்களின் கற்றலை ஊக்கப்படுத்தி வருவதாக வரலாற்றுக் குழுவின் ஏற்பாட்டாளரும், வரலாற்று ஆசிரியருமான த.ஐங்கரன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment