20 Dec 2022

கல்முனை கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு.

SHARE

(நூருல் ஹுதா உமர்)

கல்முனை கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) ஏற்பாட்டில் Diakonia அனுசரனையுடனான செயலமர்வு கல்முனை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் என்.எம். அப்துல் மலீக் அவர்களின் ஒழுங்கமைப்பில் சமாதானம் மற்றும் விழுமியம் கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு மத்தியில் அடுத்த ஆண்டில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கில் அதிபர்களுக்கான ஒரு நாள் (TOT) பயிற்சிப்பட்டறை நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகவும், வளவாளராகவும் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் கலந்து கொண்டு அதிபர்களைப் பயிற்றுவித்ததுடன் இப்பயிற்சிப் பட்டறையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ஏ.எம். அஸ்லம் சஜா பிரதான வளவாளராகக்கலந்து கொண்டு அதிபர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.

மேலும்,பிரதிக் கல்விப்பணிப்பாளர்காளான எம்.எச்.எம். ஜாபீர், ஜிஹானா ஆலிம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். பயிற்சியின் இறுதியில் அதிபர்கள் 2023ம் ஆண்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் பற்றி கலந்துரையாடி தமது திட்டங்களை முன்மொழிந்ததும் இப்பயிற்சியின் சிறப்பம்சமாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: