24 Dec 2022

நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு – எதிர்க்கட்சித் தலைவர்.

SHARE

நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடுஎதிர்க்கட்சித் தலைவர்.

இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளையிட்டு நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு. மாலை மரியாதை செய்து அவர்களை சிம்மாசனத்தில் அமர்தியததான் இந்த நாடு. அவ்வாறானவர்களுக்கு மக்களின் பசி, கண்ணீர் புரிவதில்லை. அவர்களுக்கு இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளை இதனைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது.

என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மூச்சு செயற்றிட்டத்தின் கீழ் 39 இலெட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு போதனா வைத்யதியசாலையின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை(22) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

39 இலெட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி இப்பிரதேசத்தில் வாழக்கின்ற மக்களின் இன்னல்களின் ஒருபகுதியை நிவர்த்தி செய்வதற்கு எனக்கு கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.

சுவாசம் எனும் எமது திட்டத்தினுடாக வழங்கப்படும் எமது இச்செயற்றிட்டத்தின் 55 வது வைத்தியசாலையாகும், இதுவரையில் நாம் 1680 இலெட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளோம். இதனை ஒரு சாதாரண வேலைத்திட்டமாக கருதமுடியாது. இது உயிர்காக்கும் வேலைத்திட்டமாகும். அதுபோல் இதுவரையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு, 2292 இலெட்சம் ரூபா பெறுமதியான  48 பாடசலைகளுக்கு தலா ஒவ்வொரு பேரூந்துகளை வழங்கியுள்ளோம். பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 178 இலெட்சம் ரூபா பெறுமதியான கணிணிகளையும் பாசாலைகளுக்கு வழங்கியுள்ளோம். இவ்வாறு வேறுபட்ட சிந்தனையில் நாம் வேலைசெய்து கொண்டிருக்கின்றோம். 74 வருட அரசியல் வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் இவ்வாறு இந்நாட்டில் வேலை செய்திருக்கவில்லை.

மட்டக்களப்பில் 3 தேர்தல் தொகுதிகள், 616 வாக்குச்சாவடிக்கள், 14 பிரதேச செயலாளர் பிரிவுகள், 345 கிராம சேவை உத்தியோகஸ்த்தர் பிரிவுகள், 1240 குக்கிராமங்கள், லெட்சக்கணக்கான மக்கள், இம்மாவட்டத்தில் வாழ்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் நான் உறுத்தியெடுத்துக் கொள்கின்றேன் இம்மாவட்டத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்து வைப்பதற்கு எதிர்காலத்தில் பொறுப்பெடுப்போம் என்று.

இவ்வைத்தியசாலைக்கு மெத்தைகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை ஒன்றை என்னிடம் முன்வைத்திருந்தார். அதனை அக்காலத்தில் எம்மால் வழங்க முடியாமல் போய்விட்டது. எதிர்காலத்தில் அதனையும், வைத்தியசாலைக்குத் தேவையான ஏனைய மருத்துவ இயந்திரங்களையும் நாம் வழங்குவோம்.

கடந்த காலத்திலிருந்து வந்த அரசாங்கங்களும், எதிர்க்கட்சியினரும், மாறி மாறி கேம் ஆடிக்கொண்டிருப்பார்கள் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு மக்களுக்கு மானியம் வழங்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள்,  மாறாக எவ்வாறாயினும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற எண்ணத்துடன் எதிர்க்கட்சியினர் அரசை விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். “அவனுகளும் ஒன்றுதான் இவனுகளும் ஒன்றுதான்என மக்கள் கூறுவார்கள். கடந்த சுனாமிக்குப் பினனர் கோடிக்கணக்கான பணம் இலங்கைக்கு வந்திருந்தது. அதன் பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு ஜனாதிபதியாக்கியவர்கள்தான்அவனுகளும் ஒன்றுதான் இவனுகளும் ஒன்றுதான்எனக் கூறுபவர்கள். இவர்கள் மத்தியிலே நாங்கள் வித்தியாசமானவர்கள். நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நோக்குடன் எதிர் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மிகவும திறம்பட மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்கின்றோம். அதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

நாம் இவ்வாறு அபிவிருத்திகளைச் செய்யும்போது சிலர் சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இந்நாட்டின் இன்றய நிலைமை. எனவே கல்வியிலும், சுகாதாரத்திலும் வீழ்ந்துகிடக்கின்ற நாட்டைக் கட்டியயெழுப்ப வேண்டும். வெளிநாடுகளுக்கு நிகரான ஒரு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாணவர்கள் முன்னேற வேண்டும். இதனை சிலர் ஏழனம் செய்கின்றார்கள். அதற்காக நாம் கவலைப்படப் போவதில்லை.

இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளையிட்டு நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு. மாலை மரியாதை செய்து அவர்களை சிம்மாசனத்தில் அமர்தியததான் இந்த நாடு. அவ்வாறானவர்களுக்கு மக்களின் பசி, கண்ணீர் புரிவதில்லை. அவர்களுக்கு இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளை இதனைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. எனவே நாம் கல்வியிலும், சுகாதாரத்திலும் புரட்சியை ஏற்படுத்துவோம். மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்களின் அனைத்து விடையங்களையும் நாம் எதிர்காலத்தில் கையிலெடுப்போம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி..கலாறஞ்சினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி,  முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி, மற்றும் வைத்திய அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: