11 Dec 2022

மனித உரிமைகளை வலியுறுத்தி தேசிய அமைப்புக்கள் விழிப்புணர்வு நிகழ்வு.

SHARE

மனித உரிமைகளை வலியுறுத்தி தேசிய அமைப்புக்கள் விழிப்புணர்வு நிகழ்வு.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இலங்கையில் நலிவடைந்து செல்லும் மனித உரிமைகளை வலியுறுத்தி தேசிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியிலும் சுதந்திர சதுக்கத்திலும் சனிக்கிழமை 10.12.2022 இடம்பெற்றன.

நிகழ்வில் நாடெங்கிலுமிருந்து வருகை தந்திருந்த தேசிய தன்னார்வ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை மீறலினால் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற அமர்வு நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருமான  சாலிய பீரிஸ், பேராசிரியர் கலாநிதி அர்ஜுன பராக்கிரம, ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கன் உட்பட இன்னும் பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கையில் மறுதலிக்கப்படும்  மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிகழ்வில் உரையாற்றினர்.

இறுதியில் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் மனித உரிமை மீறல்களை வலியுறுத்தி மௌன மொழி தெருநாடகமும் அமைதிப் பேரணியும் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காணி உரிமைகளுக்காக களப்பணியாற்றும் காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணி,  கிழக்கு மனித எழுச்சி அமைப்பு, காணி உரிமைகளுககான அம்பாறை மாவட்டச் செயலணி, மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தேசிய தன்னார்வ அமைப்புக்கள் பங்கெடுத்தன. 


















SHARE

Author: verified_user

0 Comments: