தேசிய சிறுவர் இயற்கை ஆர்வலர் போட்டியில் செங்கலடி வவேகானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த அனுன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தேசிய ரீதியில் நடைபெற்ற சிறுவர் இயற்கை ஆர்வலர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி வவேகானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம் ஒன்று தொடக்கம் 6 வரையிலான மாணவர்களிடையே தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட இவ்வருடத்திற்கான சிறுவர் இயற்கை ஆர்வலர் போட்டியில் மட்.ககு.செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் ஆதவன் அனுன் எனும் மாணவன் தேசியமட்டத்தில இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.மாணவர்கள் வாழும் சூழலை விஞ்ஞான நோக்கத்தேடு ஆய்ந்து அறியும் கற்றலை சிறு பராயத்தில் இருந்தே வளர்ப்பது இப்போட்டியின் நோக்கமாகும். ஊலக விஞ்ஞான தினமான வியாழக்கிழமை(10) இப்போட்டியில் தேசியமட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மேற்படி மாணவனை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும், உலக விஞ்ஞான தின நிகழ்வும் மேற்படி பாடசாலையில் வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாடசாலை மாணவர்கள் கண்டு பிடித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, தேசியமட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஆதவன் அனுன் என்ற மாணவரும் இதன்போது பராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
0 Comments:
Post a Comment