17 Nov 2022

நீர் நிலையிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.

SHARE

நீர் நிலையிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப்பிரதேசத்திற்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் உள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் புதன்கிழமை (16) மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடிப் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுபட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை அக்கிராமத்திலுள்ள நீர் நிலையில் சடலம் ஒன்று தென்படுவதாக அதனை அவதானித்தவர்கள் தெரிவித்ததை யடுத்து அங்கு விரைந்த களுவாஞ்விகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, சடலத்த மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் குன்றியவர் எனவும் பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகசன் சூரியகுமார் என அடையாளர் காணப்பட்டள்ளார்.





SHARE

Author: verified_user

0 Comments: