தவசி லேணிங் சிற்றியின் கௌரவிப்பு நிகழ்வு.
பகுதிநேரக் கல்வி நிலையமாக விளங்கும் அமரர் கா.மாரிமுத்தன் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினமும் மாவடிவேம்பு தவசி லேணிங் சிற்றியின் கௌரவிப்பு அண்மையில் தவசி லேணிங் சிற்றியின் தலைவர் மா.அக்க்ஷயன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு முதன்மை
அதிதியாக ஓய்வுநிலை அதிபர் க.சத்தியவரதன் மற்றும் மா.தவராச அத்துடன் சிரேஸ்ட கணித ஆசிரியர்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சித்தாண்டியைசேர்ந்த
ஊடகவியலாளர்
நல்லதம்பி நித்தியானந்தன் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளரின் சேவை நலன் பாராட்டி ஊடகவியலாளருகன
சிறப்பு கௌரவ விருதும் வழங்கி வைக்கப்பட்டார்.
நிகழ்வில் ஆசிரியர்கள்
அதிபர்கள் கௌரவிக்கப்பட்டடது, அவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் நானிலம் கலைஞர் வட்டத்தின் கலைஞர்களுக்கும்
விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் தவசி லேணிங்
சிற்றியின் முதல்வரினால் எழுதப்பட்ட "இயற்கை அனர்த்தம்" தொடர்பான
நூலும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.
குறித்த தவசி லேணிங்
சிற்றியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குரிய பாடத்துடன் தொடர்புடைய நூல்களும் அதிதிகளினால்
வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் மாணவர்களின்
கலை நிகழ்வும் நடைபெற்றன. நிகழ்வில் உரையாற்றிய முதன்மை அதிதி அதிபர் மா.தவராஜா, மாணவர்களின்
கல்வி வளர்ச்சிக்கு தவசி லேணிங் சிற்றியின் பங்களிப்பு முக்கிய பங்காற்றுகின்றது, கல்வியகத்தின்
முதல்வர் ஒரு எழுத்தாளர் பல புத்தாகங்களை கல்விகற்கும் மாணவர்களின் நன்மை கருதி எழுதி
வெளியீட்டு இருக்கின்றார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள்
தொடக்கம் சித்தாண்டி ஊடகவியளார் நல்லதம்பி நித்தியானந்தன் உள்ளிட்ட பலரை அழைத்து
கௌரவித்தமை சிறப்பானதொரு விடயமாகும் என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment