வாகனேரியில் புனரமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை வழிபாடுகள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள வாகனேரி கிராமத்திற்கு உரித்தான செல்ல பிள்ளையார் கோவிலானது வாகனேரி பிரதான வீதியில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு யுத்தகாலத்திலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் பாதிக்கப்பட்டு, எந்த விதமான புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்பட்டது.
இந்நிலையில் இக் கோவில் முறையாக பதிவு செய்யப்பட்டு, செல்ல பிள்ளையார் கோவில் என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 69 ஆண்டுகள் கடந்தும், இந்த பிள்ளையார் கோவிலாது அதே நிலைபாட்டில் காணப்பட்டது.
இந்நிலைமையினைக் கருத்திற் கொண்ட சட்டதராணி மயூரி ஜனன் அம்மணியும், அவரின் குடும்பத்தினரும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள், வாகனேரி கிராம மக்களும் இணைந்து தொடர்ச்சியாக சிரமதானத்தினை மேற்கொன்டு ஒருமித்த முயற்சியுடன் பிரபல்யம் அடைய வைத்துள்ளனர்.
இவ்ஆலயத்திற்கு எதிரிகாலத்தில் பல உதவிகள் கிடைப்பதற்கும், தமிழர்ளின் இருப்பினை உறுதிபடுத்தவும், மங்கிப்போன கலாசாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்காகவும் செவ்வாய்கிழமை (04) சரஸ்வதி பூஜை நிகழ்வானது ஒழுங்கு செய்து முன்னெக்கப்பட்டது.
இப்பூஜை நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சினி முகுந்தன் உட்பட ஆலயநிர்வாகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment