17 Oct 2022

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு முன்பள்ளி சிறார்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு.

SHARE

(சுதன்) 

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு முன்பள்ளி சிறார்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு.

மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவின் மகிழுர்முனை சில்வபெல்ஸ் முன்பள்ளி பாடசாலையில் சிறார்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில்,  சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் அவர்களின்  தலைமையில் திங்கட்கிழமை (17) சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்பள்ளிகளின் போசாக்கின்மையை குறைக்கும் பொருட்டு நாளாந்தம் முன்பள்ளி சிறார்களுக்கு போசணை மிக்க இலைக்கஞ்சிக் கோப்பை வழங்கும் வேலைத்திட்டம் களுதாவளை -01 வீனஸ் முன்பள்ளி மற்றும் துறைநீலாவணை -தெற்கு,01 களம் முன்பள்ளி பாடசாலைகளிலும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. அருந்ததி சீவரெத்தினம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.சோ.தமிழ்வாணி, எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர்  பா.துரைராசசிங்கம், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.தேவதாசன் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சமூக அபிவிருத்தி உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமுதாய அடிப்படை அமைப்பு), சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், போதகர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறார்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.























SHARE

Author: verified_user

0 Comments: